முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பா.ஜ.க.வுக்கு தாவ திட்டம்?

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களில் பெரும் பகுதியினர் சமீபத்தில் ராஜினாமா செய்தும், பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பா.ஜ.க.வில் சேர விருப்பம் தெரிவித்துள்ள இந்த எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது என்று கடந்த 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்த முகுல் ராய் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தா நகரில் செய்தியாளர்களிடம் இந்த தகவலை நேற்று தெரிவித்த முகுல் ராய், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக முன்னர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து