கின்னசில் இடம்பெற 116 மணி நேரம் பாத் ரூமில் இருந்த நபர்

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      உலகம்
bathroom Guinness 2019 07 13

பெல்ஜியம் நாட்டின் ஆஸ்டெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்மி டி பிரானே. இவர் இந்த வாரத்தில் 5 நாட்களாக கிட்டதட்ட 116 மணி நேரம் தொடர்ந்து பாத் ரூமில் அமர்ந்துள்ளார். இவர் 165 மணி நேரம் பாத் ரூமில் அமர பிளான் செய்துள்ளார். ஆனால், 116 மணி நேரங்களிலேயே கிவ் அப் செய்து விட்டார். ஏன் இப்படி செய்தார் என்பதை பிரானே கூறுகையில்,

என்னை நானே கேலிக்கு உள்ளாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இதை ஏன் செய்யக் கூடாது? என யோசித்தேன். மக்கள் என்னை கேலி செய்வதை விட நான் விரும்புவது வேறு எதுவுமில்லை. ஏனென்றால் அவர்களை நானும் கேலி செய்வேன். முன்னதாக 100 மணி நேரம் ஒருவர் பாத் ரூமில் அமர்ந்ததாக கேள்விப்பட்டேன். எனவேதான், அதைவிட அதிகமாக 165 மணி நேரம் அமர முயற்சித்தேன். ஆனால், கால் வலி மற்றும் உடல் அசதி காரணமாக 116 மணி நேரத்துடன் முடித்துக் கொண்டேன். இது அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனையாக அமையும் என நம்புகிறேன் என கூறினார். இதையடுத்து பிரானே சொன்னதுபோல யாரேனும் ஏற்கனவே இதுபோன்று கின்னஸ் உலக சாதனை யாரேனும் செய்துள்ளார்களா? என உள்ளூர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து