முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தொழிலாளர் நல துறை அமைச்சர் ராஜினாமா

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலெக்ஸ் அகோஸ்டா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் அலெக்ஸ் அகோஸ்டா.  50 வயதான இவர் மத்திய அரசின் வக்கீலாக இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அங்கு ஜெப்ரி எப்ஸ்டீன் (66) என்ற பெரும் கோடீஸ்வர பைனான்சியர், சிறுமிகளை கடத்தி, உல்லாசம் அனுபவித்ததாக 2008-ம் ஆண்டு சிக்கினார். இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 45 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியது வரலாம். ஆனால் அப்போது அரசு வக்கீலாக இருந்த அலெக்ஸ் அகோஸ்டா, ஜெப்ரியுடன் ரகசிய பேரம் நடத்தி தண்டனை குறைப்புக்கு வழி செய்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் அம்பலத்துக்கு வந்ததை தொடர்ந்து அலெக்ஸ் அகோஸ்டா, அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இருவரும் வாஷிங்டனில் நிருபர்கள் மத்தியில் அலெக்ஸ் அகோஸ்டா கூறும் போது, ஜெப்ரி விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்தேன். பதவி விலகுவதுதான் சரியானது என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து