முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய ஏவுகணை பாகங்களை வாங்க துருக்கி அதிரடி முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

ரஷ்ய நாட்டிடம் இருந்து எஸ்- 400 ஏவுகணை தொகுதி பாகங்களை வாங்குவதற்கு துருக்கி முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி வாங்கினால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு துருக்கி அடி பணியவில்லை. தனது ராணுவ தளவாட கொள்முதல் என்பது இறையாண்மையையொட்டிய விஷயம் என துருக்கி திட்டவட்டமாக கூறி விட்டது.

இந்த நிலையில் ரஷ்யா, தனது எஸ்- 400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கிக்கு வினியோகிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் தொடர்ந்து 2-வது நாளாக ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி பெற்றுள்ளது. இது தொடர்பாக துருக்கி ராணுவ அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

முர்டெட் விமானப்படை தளத்துக்கு ரஷ்யாவின் 4-வது சரக்கு விமானம் வந்து சேர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் சூழல் நிலவியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து