நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      விளையாட்டு
Williamson 2019 07 14

Source: provided

லண்டன் : நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து பந்து வீசி வருகிறது.

இந்தப் போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். 9 இன்னிங்ஸ்களில் 549 ரன்களை கடந்து இலங்கையின் ஜெயவர்தனே சாதனையை வில்லியம்சன் முறியடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து