முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ச்சியாக 11 வெற்றிகள் பெற்று குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் முன்னணி குத்துச் சண்டை வீரராக திகழ்ந்த விஜேந்தர் சிங், தொழில்முறை போட்டியில் தொடர்ச்சியாக 11 வெற்றிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி குத்துச் சண்டை வீரராக திகழ்ந்தவர் விஜேந்தர் சிங். இவர் திடீரென இந்தியாவுக்காக விளையாடுவதில் இருந்து விலகி, தொழில்முறை குத்துச் சண்டையில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதற்கு 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த விஜேந்தர் சிங், அமெரிக்காவில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற போட்டியில் மைக் ஸ்னைடரை எதிர்கொண்டார்.

எட்டு சுற்றுகளை கொண்ட சூப்பர் மிடில்வெயிட் போட்டியில் நான்காவது சுற்றிலேயே மைக் ஸ்னைடரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் விஜேந்தர் சிங்.  வெற்றி குறித்து விஜேந்தர் சிங் கூறுகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் களம் இறங்கியது சிறப்பானது. அமெரிக்காவில் முதன்முறையாக கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து