டி வில்லியர்ஸ்க்கு விராட் கோலி: யுவராஜ் சிங் ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      விளையாட்டு
Yuvraj Singh earnestly 2019 06 10

Source: provided

உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் சேர்த்துக் கொள்ளும்படி வற்புறுத்தியதாக வெளிவந்த விமர்சனத்தில் விராட் கோலி, யுவராஜ் சிங் டி வில்லியர்ஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா அணியின் தலை சிறந்த வீரரான ஏபி டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். உலகக்கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி மோசமாக விளையாடியதைத் தொடர்ந்து ஒரு செய்தி வெளியானது. டி வில்லியர்ஸ் உலகக்கோப்பை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்படுவதற்கு முன் அணியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார் .இதனால் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இதுவரை அதற்கு விளக்கம் கொடுக்காத டி வில்லியர்ஸ் நேற்று முன்தினம் நீண்ட அறிக்கை மூலம் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் டி வில்லியர்ஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.விராட் கோலி தனது சமூக வலைதளம் பக்கத்தில் ‘‘என்னுடைய சகோதரர் ஆகிய நீங்கள் மிகவும் நேர்மையானவர், எடுத்துக் கொண்ட வேலையை சரியாக முடிப்பவர் என்பது எனக்குத் தெரியும். இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கு நடந்திருப்பது துரதிருஷ்டவசமானது. ஆனால், நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம். உங்களை நம்புகிறோம்.உங்களுடைய சொந்த விஷயம் குறித்து மற்றவர்கள் பேசுவது கவலையளிக்கிறது. அது தேவையற்றது. உங்களுக்கும். உங்களுடைய அழகான குடும்பத்திற்கு இன்னும் அதிகான அன்பு மற்றும் பலம் கிடைக்கும். நானும் எனது மனைவி அனுஷ்கா சர்மாவும் எப்போதுமே உங்களுக்கு ஆதரவாக இருப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் தனது வலைபக்கத்தில் ‘‘ என்னுடைய நண்பர் மற்றும் லெஜண்ட், சிறந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள். நான் விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர் நீங்கள். நீங்கள் இல்லாமல் தென்ஆப்பிரிக்கா உலகக்கோப்பையை வெல்ல ஒருபோதும் வாய்ப்பில்லை. இது அணியில் இழப்பு. உங்களுடைய இழப்பு அல்ல. நீங்கள் எப்படி பட்ட ஜென்டில்மேன் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து