நிபந்தனைகளின் பேரில் கப்பலை விடுவிக்க தயார் - ஈரானுக்கு, இங்கிலாந்து அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      உலகம்
England instruction to Iran 2019 07 15

லண்டன் : நிபந்தனைகளின் பேரில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் சூப்பர் டேங்கர் கிரேஸ் 1 என்ற எண்ணெய் கப்பல் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது. இதனால் ஈரான் மற்றும் இங்கிலாந்து இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நிபந்தனைகளின் பேரில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜெரேமி ஹண்ட் கூறுகையில், ஈரானுடனான பிரச்சினையை தீர்க்கவே விரும்புகிறோம். சிரியாவுக்கு எண்ணெய் எடுத்து செல்ல மாட்டோம் என உத்தரவாதம் அளித்து, நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.  ஆனால் இங்கிலாந்தின் இந்த நிபந்தனையை திட்டவட்டமாக நிராகரித்துள்ள ஈரான் எந்த சூழ்நிலையிலும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளது. அத்துடன் சிறைபிடித்து வைத்துள்ள தங்களது எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் இங்கிலாந்தை ஈரான் வலியுறுத்தி உள்ளது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து