முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மீது, குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 2 சகோதரிகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். ஆசிரமத்தில் தங்கியிருந்த போது தங்களை சாமியாரும் அவரது மகனும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை குஜராத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கேட்டு ஆசாராம் பாபு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை 210 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், கீழ் நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து