ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்தவர் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      இந்தியா
jammu shot dead 2019 05 22

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் அத்துமீறிய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை உள்ளது. இந்த எல்லையை தாண்டி அத்துமீறி பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் ஒருவர் ஊடுருவ முயன்றார். பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையையும் மீறி அத்துமீறியதால், பாதுகாப்பு படையினர் அவரை சுட்டுக்கொன்றனர். அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது. சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து