முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்?

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டோனி அவுட் ஆனதால் புகைப்பட கலைஞர் ஒருவர் அழுததாக வலைதளங்களில் வைரான படங்களின் உண்மை தன்மை தற்போது வெளிவந்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த வார வைரல் சம்பவங்களில் ஒன்றாக அமைந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி போராடி தோல்வியை தழுவியது. இப்போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவருடன் களத்தில் இருந்த டோனி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். எனினும், ஜடேஜா அவுட் ஆனதும் நியூசிலாந்து வீரர் குப்திலால் டோனி, நூலிழையில் ரன் அவுட் ஆனார். டோனி ரன் அவுட் ஆனது நோ-பால் எனும் சர்ச்சை வலைத்தளங்களில் வைரல் ஆனது. இத்துடன் டோனியின் ஓய்வு அறிவிப்பு பற்றிய விவரங்களும் சமூக வலைத்தளவாசிகளால் பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே களத்தில் டோனி ரவுட் ஆனதை பார்த்து அங்கிருந்த புகைப்பட கலைஞர் அழுத புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ததில், நெட்டிசன்கள் வைரலாக்கிய புகைப்படத்தில் இருக்கும் புகைப்பட கலைஞர் கத்தாரில் நடைபெற்ற ஏ.எப்.சி. ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் தனது அணி தோல்வியுற்றதற்காக அழுதது தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படங்களில் புகைப்பட கலைஞர் கேமரா வியூ பைன்டரை பார்ப்பது போன்று இருக்கிறது. படத்தில் இருப்பவர் ஈராக் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆவார். இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற 2019 ஏ.எப்.சி. ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியை பார்த்து அழுதார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து