முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

இங்கிலாந்து  உலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது.

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. அந்த விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. 44 ஆண்டு கால இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவு நேற்று நனவானது.

3 தடவை இறுதிப்போட்டியில் தோற்று சாம்பியன் வாய்ப்பை இழந்த அந்த அணிக்கு இந்தமுறைதான் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

1975-ம் ஆண்டு உலகக்கோப்பை இங்கிலாந்தில் அறிமுகமானது. இந்தப் போட்டி உருவாவதற்கு காரணமாக அந்த நாடு அறிமுக போட்டியில் அரை இறுதியில் தோல்வியை தழுவியது.

2-வது உலகக்கோப்பையும் இங்கிலாந்தே நடத்தியது. இந்த முறை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. வெஸ்ட் இண்டீசிடம் 92 ரன்னில் தோற்று கோப்பையை இழந்தது. 3-வது போட்டித் தொடரையும் அந்த நாடே நடத்தியது. இதில் அரை இறுதியோடு இங்கிலாந்தின் கதை முடிந்தது.

4-வது உலகக்கோப்பை இங்கிலாந்துக்கு வெளியே இந்தியாவில் முதல் முறையாக நடந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 7 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று 2-வது முறையாக கோப்பையை இழந்தது.

ஆஸ்திரேலியாவில் நடந்த 5-வது உலக கோப்பையிலும் அந்த அணி சிறப்பாக விளையாடியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 22 ரன்னில் தோற்று 3-வது முறையாக கோப்பையை இழந்தது.1999-ம் ஆண்டு இங்கிலாந்து மீண்டும் உலக கோப்பையை 16 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தியது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பிறகு நடந்த போட்டிகளிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

கடந்த முறை நடந்த போட்டியில் அந்த அணி முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக வெளியேறியது.

20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை இங்கிலாந்து 5-வது முறையாக நடத்தியது. இந்தப் போட்டித் தொடருக்காக அந்த அணி கடந்த 4 ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு சிறந்த வீரர்களை தயார்படுத்தியது.கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணி மிகவும் அபாரமாக விளையாடி எல்லா அணிகளையும் வீழ்த்தி முத்திரை பதித்தது. இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்துக்குதான் உலகக் கோப்பை வாய்ப்பு என்று வல்லுனர்கள் கணித்து இருந்தனர்.

அதற்கு ஏற்றவாறு மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி அனைத்து எதிர்பார்ர்பையும் தாண்டி அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதிப் போட்டியும், அதைத் தொடர்ந்து சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த கணக்கில் இங்கிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.இங்கிலாந்து அணிக்கு இறுதிப் போட்டியில் அதிர்ஷ்டமம் அதிகஅளவில் கிடைத்தது.கிரிக்கெட்டை அனைத்து வகையிலும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லும் இங்கிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை வென்றதன் மூலம் தனது கனவை நனவாக்கி கொண்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து