முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 17-ந்தேதி கலந்தாய்வு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தனியார் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கலந்தாய்வு நடக்கிறது.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த 8-ந்தேதி தொடங்கியது.முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கும் 9-ந்தேதி முதல் பொது பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைப்பெற்று வருகிறது. முதல் 2 நாட்களில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின. அதனை தொடர்ந்து தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒவ்வொன்றாக நிரம்பின.இந்த வருடம் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்த போதிலும் எல்லா இடங்களும் விரைவாக பூர்த்தி அடைந்தன. அதனை தொடர்ந்து நிர்வாக ஒதுக்கீட்டிற்கான எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு இன்றும் நாளையும் நடக்கிறது. அதனை தொடர்ந்து தனியார் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கலந்தாய்வு நடக்கிறது.முதல் இரண்டுநாள் அனைத்து பிரிவினருக்கும், இறுதி நாள் பி.சி. முஸ்லிம், எஸ்.சி, எஸ்.சிஅருந்ததியர், எஸ்.டி. பிரிவினருக்கு நடைபெறுகிறது.நீட் மதிப்பெண் 398-ல் இருந்து தொடங்கி 107 வரை உள்ள மாணவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜெனரல் ரேங்க் 5835-ல் இருந்து 9680 வரையிலும் இன தரவரிசை எண் அடிப்படையிலும் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறுகையில், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடக்கிறது.இதனால் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ள அதிகமானோருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இடம் ஒதுக்கீடு உறுதியானது அல்ல. இதில் பங்கேற்காத மாணவ- மாணவிகளுக்கு காலி இடங்கள் அடிப்படையில் இடம் ஒதுக்க இயலாது என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து