முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

டெஹ்ரான்  : ஈரானில் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் துணியை கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிக்கு அந்நாட்டு பெண்களிடம் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
1979-ம் ஆண்டு ஏற்பட்ட இஸலாமிய புரட்சிக்கு பின்னர் ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இதனை தற்போது எதிர்க்க தொடங்கி இருக்கும் பெண்கள், ஹிஜாப் அணியாமல் பொது இடங்களை துணிச்சலாக நடமாட தொடங்கி உள்ளனர்.

ஹிஜாப் கட்டாயம் என்ற விதி தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிரானது என்பது அந்நாட்டு பெண்களில் வாதம் ஆகும். இஸ்லாமிய விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து விதிமீறுவோரை சட்டத்தின் முன் நிறுத்த ஈரானில் உருவாக்கப்பட்ட அறநெறி காவல் துறை மீதும் அந்நாட்டு பெண்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் பூங்கா ஒன்றில் தண்ணீர் துப்பாக்கியை வைத்து விளையாடிய பெண்ணை அறநெறி காலவர்கள் கைது செய்து இழுத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து