முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை யானைக்கவுனி மேம்பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கும்? அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை யானைக்கவுனி மேம்பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்து தி.மு.க. உறுப்பினர் சேகர்பாபு கேட்ட கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்தார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு சென்னையில் இருப்புப்பாதை விரிவாக்க பணிக்காக யானைக்கவுனி மேம்பாலம் மூடப்பட்டது. புதிய மேம்பாலம் அமைக்க மாநகராட்சியும் ரயில்வே துறையும் தலா ரூ 30 கோடி நிதியில் திட்டமிடப்பட்டது. இந்த பாலம் மூடப்பட்டு இரண்டு வருடங்களாகி விட்டது. இன்னும் மேம்பாலம் இடிப்பு பணி தொடங்கவில்லை. இதற்காக மாநகராட்சி. ரயில்வே துறை ஆகியவை இணைந்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்து பேசியதாவது;-

 சென்னை மாநகராட்சியில், வால்டாக்ஸ் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலைகளை இணைக்கும், யானைக்கவுனி பாலச் சாலையில் அமைந்துள்ள, யானைக்கவுனி பாலம் ரயில்வே துறையை சார்ந்ததாகும். இப்பாலத்தின் இருபுறமும் உள்ள, அணுகு சாலை பகுதி மட்டுமே, சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இப்பாலம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ள காரணத்தால், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு, ரயில்வே துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையால், தடை செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தின் கீழ் உள்ள, இருப்புப் பாதைகளை கூடுதலாக அமைக்க ஏதுவாக, பாலத்தின் ரயில்வே பகுதி நீளத்தை, 47 மீட்டரிலிருந்து 150 மீட்டருக்கு நீட்டிக்க ரயில்வே துறை உத்தேசித்துள்ளது.இப்பாலத்தை இடித்து விட்டு, புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணியில் தற்போதுள்ள 50 மீட்டர் நீளமுள்ள ரயில்வே பகுதி பாலம் அமைப்பதற்கு, ரயில்வே துறை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 50:50 விகிதாச்சாரத்தில் நிதி பங்களிப்பாகவும், புதிதாக 100மீ நீட்டிக்கப்படவுள்ள பகுதியில் பாலம் அமைக்கும் பணி முற்றிலும் ரயில்வே துறை நிதி மூலமும் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பகுதி பாலப்பணிக்கான பொது சீரமைப்பு வரைபடத்தை ரயில்வே துறை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சமர்ப்பித்தது. அந்த வரைபடத்திற்கு சென்னை மாநகராட்சி 28.02.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.அதன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, அணுகு சாலைப் பகுதிக்கான, வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணிக்கு கலந்தறிதற்குரியவர் தெரிவு செய்யப்பட்டு, வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 30 கோடிகள் ஆகும்.பழுதடைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ், ரயில்வே துறையால் இரும்புத்தூண்கள் நிறுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளதால், யானைக்கவுனி மேம்பாலத்தில் கனரக மற்றும் இலகுரக வாகனப் போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பேசின்பாலச் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை - ஈ.வே.ரா பெரியார் சாலைகள் வழியாக, போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும், பாலத்தினை இடிப்பதற்கு ஏதுவாக, இரு சக்கர வாகனங்கள் செல்வதையும் தடை செய்ய ரயில்வே நிர்வாகம் காவல் துறையை அணுகியதில், மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்த பின்னர், அனைத்து வாகனங்களையும் தடை செய்யலாமென காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில்வே பகுதி பாலப்பணிக்கான மதிப்பீடுகள் ரயில்வே துறையால் தயாரிக்கப்பட்டு பழைய பாலத்தினை இடித்து விட்டு புதியதாக பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்பப்புள்ளிகள் கோரப்பட்டதில் ஒப்பந்தப்புள்ளிகள் எதுவும் பெறப்படவில்லை. எனவே, ரயில்வே துறை பழைய பாலத்தினை இடிப்பதற்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டதில் மிக அதிகமான விலைப்புள்ளிகள் பெறப்பட்டதால் அவ்வொப்பத்தினை ரத்து செய்து மறு ஒப்பம் ரயில்வே துறையால் கோரப்பட்டுள்ளது. ஒப்ப நாள் 23.07.2019 எனவும், ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளவாடங்களை மாற்றியமைத்த பின்னர் பழைய பாலத்தினை இடிப்பதற்கான பணிகள் துவங்கப்படும் எனவும், புதிய பாலத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தனியே கோரப்படும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே துறையால் ரயில்வே பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஒப்பப்புள்ளிகள் கோரப்பட்டவுடன், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கான ஒப்பப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து