முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுன்ட்டி கிரிக்கெட்டில் அஸ்வின் அசத்தல் - அரைசதத்துடன் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அரைசதத்துடன் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

கவுன்ட்டிகிரிக்கெட்டில்அஸ்வின்அசத்தல்அரைசதத்துடன்விக்கெட்டுக்கள்வீழ்த்தினார்கவுன்ட்டிகிரிக்கெட்டில்அஸ்வின்அசத்தல்அரைசதத்துடன்விக்கெட்டுக்கள்வீழ்த்தினார் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடும் அவருக்கு ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.இங்கிலாந்தின் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் சர்ரே அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

அதேபோல் 2-வது இன்னிங்சிலும் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசியதோடு 2-வது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார். நாட்டிங்காம்ஷைர் அணியில் இரண்டு இன்னிங்சில் அதிக ரன்கள் சேர்த்தவர் இவர்தான். என்றாலும் அந்த அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து