அணுசக்தி ஒப்பந்த மீறல்கள் தொடரும்: ஈரான் மதத் தலைவர்

புதன்கிழமை, 17 ஜூலை 2019      உலகம்
iran religious leader 2017 07 17

டெஹ்ரான் : வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மீறப்படுவது தொடரும் என்று ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  கூறியதாவது:

அணுசக்தி ஒப்பந்தத்தின் எந்த நிபந்தனையையும் வல்லரசு நாடுகள் கடைப்பிடிக்கவில்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் மட்டும் ஏன் அந்த ஒப்பந்த நிபந்தனைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்?

ஏற்கனவே நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளது ஒரு தொடக்கம்தான். இனி மேலும் பல நிபந்தனைகளை தொடர்ந்து மீறுவோம் என்றார் கமேனி.

தங்களது அணு சக்தி திட்டங்கள் மூலம் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஈரானும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்க அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன.

எனினும், அந்த ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஆண்டு விலகிய அமெரிக்கா, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தியது.

அதற்குப் பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிக அளவில் இருப்பு வைப்பதாகவும், குறிப்பிட்ட விகித்ததுக்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் ஈரான் அறிவித்தது. இந்த நிலையில் ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி இவ்வாறு கூறியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து