வண்ணமீன் வளர்ப்புக்கு அரசு உரிய உதவி வழங்கும் - அமைச்சர் ஜெயகுமார் உறுதி

புதன்கிழமை, 17 ஜூலை 2019      தமிழகம்
Minister-Jayakumar 2019 05 18

சென்னை : இளைஞர்கள் சுயதொழிலாக வண்ணமீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டால் அவர்களுக்கு அரசு உரிய உதவி வழங்க தயாராக உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஏ.பாண்டியன் பேசுகையில், என்னுடைய தொகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. மாறி வரும் சமூக சூழ்நிலையில் இன்று எல்லோருடைய வீடுகளில் வாஸ்துக்காகவும், அழகுக்காகவும், மன அமைதிக்காகவும் கண்ணாடி பெட்டிகளில் வண்ண மீன்களை வளர்த்து வருகின்றனர். பெரும்பாலும் தனிநபர்கள் இந்த வண்ண மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த வண்ணமீன் விற்பனையை, மீன்வளத்துறை மூலம் அரசே விற்பனை செய்தால், அரசுக்கு வருமானம் கிடைக்கும். எனவே சிதம்பரம் தொகுதியில் வண்ணமீன் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும். மேலும் சின்னவாய்க்கால், பில்லுகேடு, பட்டரை அடி, கிள்ளை கடற்கரை பகுதிகளில் முகத்துவாரம் ஆழப்படுத்தி தர வேண்டும் என்று கோரினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மீன் உணவை பொறுத்தவரை புரோட்டின்கள் அதிகம் உள்ள மனித ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தமிழக மீன்களுக்கு வெளிநாட்டு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது 300 கோடி வரை ஆண்டு மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 1500 கோடி வர்த்தமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.40 வகையான மீன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இப்படி வண்ணமீன்கள் விற்பனை செய்வது என்பது வீடுகளிலேயே செய்ய முடியும். அந்த வகையில் இளைஞர்கள் சுயதொழிலாக வண்ண மீன் வளர்ப்பு தொழில் ஈடுபட்டால் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். முகத்துவாரம் பொறுத்தவரை மீன்கள் இனவிருத்தி, கடல் அரிப்பு போன்ற தடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 36 முகத்துவாரங்கள் உள்ளன. அவைகள் அனைத்து அடுத்த 2 வருடங்களில் ஆழப்படுத்தி தரப்படும். இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து