முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 600 கோடியில் புதிதாக 2,000 பஸ்கள் அறிமுகம் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

புதன்கிழமை, 17 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடப்பு ஆண்டில் 600 கோடி ரூபாய் மதிப்பில் 2,000 பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பல புதிய பேருந்துகளை பொது மக்களின் சேவைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டும், புதியதாக 2,000 பேருந்துகள், 600 கோடி ரூபாய் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியாண்டில், அரசு நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் 10 அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி, நவீனப்படுத்தப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து