முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரளமாக தெலுங்கு பேசி அசத்தும் அமெரிக்க வாலிபரின் வீடியோ

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய வாடிக்கையாளர்களிடம் திடீரென சரளமாக தெலுங்கு பேசி அமெரிக்க வாலிபர் ஒருவர் அசத்தியுள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் தெலுங்கில் மாறி மாறி பேசிக் கொள்வதை கண்ட இசாக், வந்தவர்கள் தன்னை அழைக்கும் போதே, செப்பண்டி என தெலுங்கில் ஆரம்பித்துள்ளார். இதனைக் கேட்ட அந்த இளைஞர்கள் திகைத்துள்ளனர். பின்னர் தொடர்ந்து இசாக்கிடம் பேச்சுக் கொடுத்து, தங்கள் கையில் இருந்த செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். மிக சரளமாக தெலுங்கில் பேசியுள்ளார். இதனால் வந்திருந்த இளைஞர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். தெலுங்கு எப்படி தெரியும்? என கேட்டதற்கு இசாக், விஜயவாடாவில் 2 ஆண்டுகள் இருந்துள்ளததாகவும் அங்கு பணிபுரிந்த போது தெலுங்கு விருப்பப்பட்டு கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இசாக் பேசும் வீடியோ பார்ப்பவர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவர் தடுமாற்றமின்றி தெலுங்கில் பதில் அளிப்பது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து