முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: 12 பேர் பலி

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ : ஜப்பானின் புகழ்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், அங்கிருந்தவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காயமடைந்திருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று தெற்கு கியோட்டோவின் உஜி நகரில் உள்ள கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ. இது 3 தளங்கள் கொண்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்டது. இந்த அனிமேஷன் ஸ்டூடியோவில் உள்ளூர் நேரப்படி நேற்று  காலை 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர், கட்டிடத்தை சுற்றி பெட்ரோல் போன்ற திரவத்தினை ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து அந்த கட்டிடம் சிறிது நேரத்தில் தீப்பிடித்துள்ளதாக கியோட்டோ மாவட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து