முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனில் உலகின் மிக செங்குத்தான சாலை நியூசிலாந்தின் கின்னஸ் சாதனையை முறியடிப்பு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : நியூசிலாந்து நாடு பெற்ற உலக கின்னஸ் சாதனையை பிரிட்டன் நாடு முறியடித்துள்ளது. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. அடுத்தப்படியாக அந்நாட்டிடம், கின்னஸ் சாதனையில் தோற்றுள்ளது. உலகிலேயே மிக செங்குத்தான சாலையாக நியூசிலாந்து நாட்டின் டியூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. கின்னஸ் சான்றிதழின்படி, அந்த சாலை 35 சதவீத அளவிற்கு செங்குத்தாகவும், இரு புறங்களிலும் வீடுகளும் இருந்தது. இந்த சாதனைக்குப் பின்னர் எவ்வித சாலையும் இடம் பெறவில்லை. இந்நிலையில் தற்போது நியூசிலாந்தின் இந்த சாதனையை பிரிட்டன் நாட்டு சாலை முறியடித்துள்ளது. அந்நாட்டின் வேல்ஸ் மாநிலத்தின் ஹார்லெச் நகரத்தில் உள்ளது போர்ட் பென் லெச் சாலை. இந்த சாலை 37.5 சதவீத  செங்குத்தாக இருப்பதை கடந்த 6-ம் தேதி உலக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் உறுதி செய்தனர். இதற்கான சான்றிதழை அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமகளுக்கு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனால் நியூசிலாந்து, இரண்டாவது முறையாக இங்கிலாந்திடம் தோற்றதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த சாதனையை ஹார்லெச் பகுதி மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து