முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீனின் தத்ரூப படம் வைரல்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர் மனிதர்கள் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் ஜெல்லி மீனை தத்ரூபமாக படம் பிடித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றின் வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர் இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு கடற்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். லிசி டேலி, கடலுக்கு அடியில் நீந்தி கொண்டிருந்த போது ஆளுயர ஜெல்லி மீன் ஒன்று அவரை கடந்து சென்றது. லிசி டேலியுடன் சென்றிருந்த ஒளிப்பதிவாளர் அதனை தத்ரூபமாக படம் பிடித்தார்.

பொதுவாக ஜெல்லி மீன்கள் ஒரு மீட்டர் நீளம் மற்றும் 25 கிலோ எடை வரை மட்டுமே வளரும் தன்மை கொண்டவை என வனவிலங்கு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மனிதர்கள் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் ஜெல்லி மீனின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து