நிலலுக தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர் மும்பை விமான நிலையத்தில் கைது

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      உலகம்
Dawood Ibrahim relative arrest 2019 07 18

மும்பை : நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் காஷ்கரின் மகன் ரைஸ்வான் காஸ்கர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சிக்கும் போது, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரிஸ்வான் காஸ்கர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் ரிஸ்வான் காஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான், மும்பை போலீசார் தாவூத் இப்ராகீம் கும்பலைச் சேர்ந்த பாஹிம் என்பவரது நெருங்கிய நண்பரான அகமது ராஸா என்பவரை கைது செய்தனர். அகமது ராஸாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் ரிஸ்வான் காஸ்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அப்போது கிடைத்த தகவலின் பேரில், மும்பை விமான நிலையத்தில் ரிஸ்வான் காஸ்கரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து