சரவண பவன் ஓட்டல் அதிபர் காலமானார்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      தமிழகம்
rajagopal-saravana-bhavan 2019 07 18

சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன்  ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  உடல் நலமின்றி இருந்த ராஜகோபாலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வந்து செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறையில் அடைக்க அவர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். பின் சிகிச்சைக்காக வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ராஜகோபால் காலமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து