சட்டசபையில் சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்: முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

தமிழக சட்டசபையில் சுதந்திர போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

 தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பின்னர் நேரமில்லா நேரத்தின் போது சபாநாயகர் தனபால் அவைக்கு ஒரு அறிவிப்பை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது,

விடுதலை போராட்ட வீரரும் தமிழக உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சரும் நலிந்த பிரிவு மக்களுக்காக குரல் கொடுத்தவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் வரும் 19-ம் தேதி மாலை 5-30 மணிக்கு சட்டசபையில் திறந்து வைக்கப்படும். என்னுடைய தலைமையில் ( சபாநாயகர் ) துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து