அதற்கெல்லாம் ஸ்டாலின் சரிப்பட்டு வர மாட்டார்: அமைச்சர் ஜெயகுமார் ஜோக்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      தமிழகம்
Minister-Jayakumar 2019 05 18

அதுக்கெல்லாம் அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று ஸ்டாலின் குறித்து அமைச்சர் ஜெயகுமார் சொன்ன ஜோக்கால் சட்டசபை சிரிப்பில் ஆழ்ந்தது.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கையின் போது பேசிய தாயகம் கவி, செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா போன்றவை இந்த ஆட்சியில் இயங்கவில்லை. அதை சிறப்பாக செய்திட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வராக வருவார் என்று கூறி முடித்தார். அப்போது எழுந்த அமைச்சர் ஜெயகுமார், வாத்தியார் படத்தில் அதுக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரவே மாட்டார் என்று வடிவேலு சொல்வார்.  அந்த வசனம் தாயகம் கவி சொன்ன டயலாக்குக்கும் பொருந்தும் என்று சொன்னதும் ஆளுங்கட்சி வரிசையில் பலத்த சிரிப்பலை எழுந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து