முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் அமளி எதிரொலி: கர்நாடக சட்டசபை இன்று வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் ரமேஷ்குமார் நடவடிக்கை

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட கடும் அமளியால் சட்டப்பேரவையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்துள்ளார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று கூடிய சட்டப்பேரவையில் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு தெளிவின்றி அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்தி வைக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. கடத்தி விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது. இதனால் பா.ஜ.க.வினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் வேண்டுமென்றே வாக்கெடுப்பை தாமதம் செய்வதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவை கூடியபோது கவர்னர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே(நேற்றே) நடத்த பரிசீலிக்குமாறும், அவை நம்பிக்கையை எப்போதும் முதல்வர் குமாரசாமி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் பேரவையில் ஏற்பட்ட கடும் அமளியால் கர்நாடக சட்டப்பேரவையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார். காங்கிரஸ், ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதம் செய்தாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். நேற்று இரவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் அறிவுறுத்திய நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து