முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுடன் அதிவேகமாக சென்ற பேருந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர்.

மெக்சிகோவின் அகஸ்காலியன்ட்ஸ் மாநிலத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான நயாரித் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து வேகமாக சென்ற பேருந்து, திடீரென சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்தது.  விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர். பேருந்து கடுமையாக சிதைந்திருந்ததால், பல மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை தீயணைப்பு வீரர்கள் வெளியே எடுத்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து