காபூல் பல்கலைக் கழகம் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      உலகம்
Kabul University Bom 2019 07 19

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பல்கலைக்கழகம் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ளது காபூல் பல்கலைக் கழகம். இந்த பல்கலைக் கழகத்தின் வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக வெளியில் காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடித்ததாக காபூல் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் வெடிக்கும் நிலையிலிருந்த இரண்டாவது குண்டை செயலிழக்க செய்ததாக காபூல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து