மும்பை வீதிகளில் சுற்றித் திரிந்த சிங்கம் வைரலாகும் பொய் வீடியோவால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      இந்தியா
Mumbai  streets Lion  video 2019 07 19

மும்பையில் பொது மக்கள் நடமாடும் சாலையில் சிங்கம் சாதாரணமாக சுற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதன் உண்மைத் தன்மை குறித்து இங்கே பார்ப்போம்.

மகராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் பிரபல சின்னத்திரை நடிகர் ஒருவர், தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட வீடியோ தற்சமயம் வைரலாகியுள்ளது. அவர் பதிவிட்ட வீடியோவில் பொதுமக்கள் நடமாட்டம் கொண்ட சாலையில் சிங்கம் ஒன்று சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

இந்த வீடியோ மும்பை சாலையில் எடுக்கப்பட்டதாக சின்னத்திரை நடிகர் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார். சிலர் இந்த வீடியோ மும்பையின் ஆரே சாலையில் எடுக்கப்பட்டதாக கூறி வருகின்றனர். படேல் என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.

இவரது பதிவில், மக்கள் அவர்களின் இடத்தை ஆக்கிரமித்தால், அவை உங்களின் இடத்திற்கு வந்து விடும். இன்று அரே சாலையில் இந்த சிங்கம் கம்பீர நடைபோட்டு சென்றது. இதை பார்த்து கவலை கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார். வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில், இது மும்பையில் எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த வீடியோ குஜராத் மாநிலத்தின் ஜூனாகர் பகுதியில் எடுக்கப்பட்டதாகும். இங்கு கிர் தேசிய பூங்கா அமைந்திருக்கிறது. இதே வீடியோவினை சில செய்தி சேனல்கள் கடந்த 13- ம் தேதி வெளியிட்டன. வீடியோ வெளியானது முதல் இதனை பலர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் சிங்கம் மும்பையில் உலா வருவதாக பகிர்ந்து வருகின்றனர். வீடியோவை உற்று நோக்கினால், கிர் பூங்காவின் சின்னம் இருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் மும்பை சாலையில் சிங்கம் உலா வருவதாக கூறும் பதிவுகள் அனைத்தும் பொய் என்பது உறுதியாகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து