முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படங்கள் பதிவு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

கேரளாவில் அரசு ஊழியர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடப்பட்ட ஆபாச படங்களால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வந்த புகாரால் அட்மினை நீக்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேரளாவில் அரசு ஊழியர்கள் தங்களுக்கென வாட்ஸ்அப் குரூப் தொடங்கி உள்ளனர். திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாட்ஸ்அப் குரூப் ஒன்று உருவாக்கி அதில் தங்கள் பணி குறித்த தகவல்களை பரிமாறி வந்தனர். மேலும் அரசு ஊழியர்களின் சங்க செயல்பாடுகள், அது தொடர்பான கூட்டங்கள், அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் போன்றவற்றையும் வாட்ஸ்அப்பில் பதிவிட்டு வந்தனர். இந்த வாட்ஸ்அப் குரூப்பின் அட்மின்னாக சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் இருந்து வந்தனர். அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு சங்க செயல்பாடுகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சங்கத்தின் வாட்ஸ்அப் குரூப்பில் ஏராளமான ஆபாச படங்கள் அடுத்தடுத்து பதிவிடப்பட்டன. இதைக் கண்ட பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆபாச படம் பதிவிடப்பட்டு இருப்பது பற்றி சங்க நிர்வாகிகளிடம் புகார் கூறினர். சங்க நிர்வாகியும், குரூப் அட்மினுமானவர் இதுபற்றி விசாரித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அந்த படங்களை குரூப்பில் இருந்து நீக்குவதாகவும் உறுதி அளித்தார். பின்னர் அவர், வாட்ஸ்அப் குரூப்பில் இது பற்றி தகவல் பதிவிட்டார். அதில் சங்க உறுப்பினர் ஒருவரின் செல்போன், தொலைந்து விட்டதாகவும், அந்த செல்போனை எடுத்தவர் அதில் செக்ஸ் படங்களை பதிவேற்றியதாகவும் கூறி இருந்தார். ஆனால் அவர் ஆபாச படங்களை பதிவேற்றியவரை பாதுகாக்க தவறான தகவலை பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் வாட்ஸ்அப் குரூப்பின் அட்மின் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து