கேரளாவில் தீவிரமடையும் மழை: பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      இந்தியா
kerala rain 6 districts red alert 2019 07 17

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது.

கேரளாவில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக பெய்தது. அதிலும் சில நாட்கள் மட்டும் பெய்து விட்டு அதன் பிறகு ஏமாற்றி சென்றது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் குறைவான மழைப் பொழிவே கிடைத்தது. பெரியாறு அணையின் நீர் மட்டம் குறைந்து வந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை 57 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 336 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 112 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று காலை 112.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1247 மில்லியன் கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 27.72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 52 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 40 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 287 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.50 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 68.88 அடி. வரத்து 15 கன அடி. திறப்பு 3 கன அடி.பெரியாறு 44.2, தேக்கடி 46.2, உத்தமபாளையம் 13.4, வீரபாண்டி 5, வைகை அணை 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து