10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      தமிழகம்
directorate of school education

10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்புக்கு மார்ச் 17 முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அதன் தேர்வு முடிவுகள் மே மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

12-ம் வகுப்புக்கு மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 11-ம் வகுப்புக்கு மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே, 14-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கிய நாளன்றே அடுத்த பொதுத்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் கால தாமதமாக பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பாடத்திட்டங்களும் நடத்தி முடிக்க வேண்டுகம் என்றும் ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்வு தேதிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து