பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதத்திற்கு தீர்ப்பு வழங்க வேண்டும்: கீழமை நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      இந்தியா
supreme court 2019 05 07

பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை ரேபரேலி நீதிமன்றம் விடுதலை செய்தது. அலகாபாத் ஐகோர்ட்டும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து பா.ஜ.க. தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. முறையிட்டது.

அப்போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. அதன்படி லக்னோ சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது வருகிறது. இந்நிலையில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு எதிரான வழக்கை கீழ் நீதிமன்றம் 9 மாதத்தில் விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து