காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீ்ர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      இந்தியா
kaveri 2018 01 16

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 2500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு இப்பகுதிகளில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 17-ம் தேதி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 355 கனஅடியும், கபினி அணையில் இருந்து 500 கனஅடியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 855 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 2500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 355 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து தொடர்ந்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்திற்கு 2500 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து