சுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      இந்தியா
pm modi 2019 05 01

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆற்றவுள்ள சிறப்புரையில் என்னென்ன அம்சங்கள் குறித்து பேசலாம் என கருத்து தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி ஆண்டுதோறும் நமது நாட்டின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் அன்றைய நாளில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே சிறப்புரையாற்றுவது மரபாகவும் வழக்கமாகவும் இருந்து வருகிறது.

இந்த ஆண்டின் சுதந்திர தினவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறை நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, தனது தலைமையிலான இரண்டாவது ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வரும் 15-ம் தேதி காலை மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது எனது உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது விலைமதிப்புள்ள கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். இதற்காக ‘நமோ ஆப்’பில் ஒரு பிரத்யேக தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எண்ணங்களை டெல்லி செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நம் நாட்டில் வாழும் 130 கோடி மக்களும் கேட்கட்டும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இன்று பதிவிட்டுள்ளார்

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து