முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 9 ஆட்டங்களில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று லீக் சுற்றோடு வெளியேறியது. அந்த அணியின் பந்து வீச்சு ஓரளவிற்கு சிறப்பாக இருந்தது. தொடக்க பேட்ஸ்மேன்கள் அசத்தினர். உலகக்கோப்பை தொடரில் பவர்பிளேயான முதல் 10 ஓவரில் அவர்கள்தான் அதிக சராசரி வைத்திருந்தனர்.

ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணியால் பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தலைமை பயிற்சியாளரான ஹதுருசிங்கா அதிரடியாக நீக்கப்படுவார் என்று செய்தி வெளியானது.

ஆனால் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய அவர் ‘‘எனக்கு இன்னும் 16 மாதங்கள் இருக்கின்றன. அதுவரை இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்வேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வங்காள தேச தொடருக்குப்பின் தலைமை பயிற்சியாளர் மாற்றப்பட வேண்டும் என்று இலங்கையின் விளையாட்டுத்துறை மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பீல்டிங் பயிற்சியாளரான ஸ்டீவ் ரிக்சன், பேட்டிங் பயிற்சியாளர் ஜான் லிவிஸ், பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயகே ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், புதுப்பிக்கப்படாது என்றும் அதிகாரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து