4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தேசிய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2016-ம் ஆண்டைய புள்ளி விவரத்தின்படி, களவு போன சொத்துகளை மீட்பதில் நான்கு ஆண்டுகளாக அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறதுஎன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார். 

தமிழக சட்டசபையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை குறித்த மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது, இந்த விவாதங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

கடந்த 8 வருடங்களாக காவல் துறையினர் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை, குற்றத் தடுப்பு, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தருதல், தடுப்புச் சட்டங்களின் கீழ் காவலில் வைத்தல் போன்ற நடவடிக்கைகளினால் மாநிலத்தில் பெரும்பாலான குற்றங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனை தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உதாரணத்திற்கு கடைசியாக வெளிவந்த தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, நமது மாநிலத்தில் வன்குற்றங்கள் 10,844 ஆகும். ஆனால், கேரளாவில் 13,548 வழக்குகளும், கர்நாடகாவில் 19,648ம், குஜராத்தில் 11,829ம், ஒடிசாவில் 19,092ம், அரியானாவில் 14,392ம், ராஜஸ்தானில் 16,223 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. மற்ற மாநிலத்தை காட்டிலும் நம்முடைய மாநிலத்தில் குற்றம் குறைந்து தான் இருக்கிறது என்பதை புள்ளி விவரத்தோடு சொல்கின்றேன். அதே அறிக்கையின் படி, நமது மாநிலத்தில் தாக்கலான சொத்து சம்மந்தமான குற்றங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு 23,650 மட்டுமே ஆகும். ஆனால், நமது அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசத்தில் 25,311ம், தெலங்கானாவில் 27,946ம், கர்நாடகாவில் 37,873ம், மகாராஷ்டிராவில் 94,826ம் மற்றும் ராஜஸ்தானில் 53,402 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. இப்புள்ளி விவரங்களிலிருந்து மாநிலத்தில் குற்றங்கள் தாக்கல் ஆவதும், குற்ற விகிதமும் மற்ற மாநிலங்களைவிட மிக குறைவாக இருந்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக கொலை உள்ளிட்ட சொத்து சம்மந்தமாக தாக்கலான ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 297 வழக்குகளில், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 499 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது 71 சதவிகித வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வழக்குகளில் களவு போன 66.5 சதவிகித சொத்துக்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2016-ஆம் ஆண்டைய புள்ளி விவரத்தின்படி, களவு போன சொத்துகளை மீட்பதில் 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய நான்கு ஆண்டுகளில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும், காவல் துறையினர் தொடர்ந்து குற்றங்கள் மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்களை விரைந்து கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டம் உட்பட பல்வேறு தடுப்பு காவல் சட்டங்களின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து வருகின்றனர். பெண்களின் நலனை காப்பதிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருவதால் நமது மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்து வருகின்றன. உதாரணமாக, தி.மு.க ஆட்சியின் இறுதியில் 2010 ஆம் ஆண்டு நடந்த வரதட்சணை தொடர்பான இறப்புக்கள் 165 ஆகும். ஆனால்,அ.தி.மு.க. அரசு பதவிக்கு வந்த பின்னர் இவ்வழக்குகள் படிப்படியாக குறைந்து, கடந்த 2018-ஆம் ஆண்டு 55 வழக்குகள் மட்டுமே தாக்கலாகியுள்ளன. இவ்வழக்குகள் 66.7 சதவிகிதம் குறைந்துள்ளன என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்க.ளின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.சிறுமி மற்றும் பெண்கள் கடத்தல் வழக்குகள் 2010ஆம் ஆண்டு 1,464 ஆக இருந்தது, 2018-ஆம் ஆண்டு 907 ஆக, 38 சதவிகிதம் குறைந்துள்ளது. பெண்களுக்கெதிராக தாக்கலாகும் மொத்த குற்றங்களும் நமது மாநிலத்தில் குறைவாகவே இருந்து வருகிறது. உதாரணமாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள கடைசி புள்ளி விவர அறிக்கையின் படி, நமது மாநிலத்தில், பெண்களுக்கெதிரான குற்ற விகிதம் 10.7 ஆகும். இது தேசிய சராசரி விகிதத்தை விட 40.7 குறைவாகும். இக்குற்ற விகிதம் நமது அண்டை மாநிலமான கேரளாவில் 53.4 ஆகவும், ஆந்திர பிரதேசத்தில் 60.4 ஆகவும், ஒடிசாவில் 77.7 ஆகவும், தெலங்கானாவில் 82.3 ஆகவும் உள்ளது. மேலும், தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, இந்தியாவில், பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மெட்ரோ நகரங்களில் சென்னை முதல் நகரமாகவும், பெருநகரங்களில் (20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள்) கோயம்புத்தூர் முதல் நகரமாகவும் உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, காணாமல் போன 1,232 சிறுவர்கள் மற்றும் 3,041 சிறுமிகளில், 1,089 சிறுவர்களையும், 2,795 சிறுமிகளையும் கண்டுபிடித்து, அவர்களது பெற்றோர் அல்லது உறவினர் வசமும் மற்றும் காப்பகங்களிலும் காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர். இவ்வாண்டு (31.5.2019 வரை), காணாமல் போன 433 சிறுவர்களில் 301 பேரையும், 1,437 சிறுமிகளுள் 1,086 பேரையும் மீட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பெற்றோர்களால் தவற விடப்படும் குழந்தைகளை மீட்டு, அவர்களது பெற்றோர்களுடன் சேர்க்கும் நோக்கில் உதயம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு மட்டும் 2,590 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் நமது மாநிலத்தில் வேரூன்றாதவாறு தடுக்க காவல் துறையினருக்கு அரசு போதுமான அறிவுரைகளை வழங்கியதன் அடிப்படையில், காவல் துறையினர், மாநிலத்தில் தடை செய்யப்பட்ட அத்தகைய இயக்கங்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து, தேசிய புலனாய்வு முகமையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக, பயங்கரவாதச் செயல்களை தடுத்து வருகின்றனர். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி ரஷீத் என்பவர் 10.9.2018 அன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதே இதற்குச் சான்றாகும். நீண்ட கடற்கரையை உடைய நமது மாநிலத்தின் கடலோர பகுதி வழியாக பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் நுழையாதவாறு தடுக்க, காவல் துறையினர், இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் இந்திய கடற்படையினருடன் இணைந்து கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.:

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து