காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      விளையாட்டு
table-tennis 2019 07 19

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணி இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதின. இதில் இந்திய அணி 3-2 என இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் அணி இறுதிப் போட்டியிலும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து