தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      தமிழகம்
ops 28-10-2018

தமிழகத்தில் நிலையான ஆட்சியை அமைக்க காரணமாக இருந்தவர் ராமசாமி படையாட்சியார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டினார்.

சட்டமன்றப் பேரவையில் எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு விழாவில் துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலகில் பிறக்கின்ற எவரும், தாங்கள் இன்ன சமுதாயத்தில்தான் பிறக்க வேண்டும் என்று கேட்டுப் பிறப்பதில்லை. அது இறைவன் கொடுக்கின்ற வரம். ஆனால், பூமியில் பிறந்த பின், தான் பிறந்த சமுதாயத்தை உயர்நிலைக்கு கொண்டு வந்திட, பாடுபட வேண்டியதும், அனைவரோடும் கூடி வாழ்ந்து இந்த சமூகத்தை முன்னேற்றம் காணச் செய்ய வேண்டியதும், ஒவ்வொரு தனிமனிதரின் தார்மீகக் கடமை ஆகும். இந்த தார்மீகக் கடமையை தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு தான் சார்ந்த சமுதாயம் இழந்து விட்ட பழம் பெருமையை மீட்டு, அவர்கள் நீடித்த வாழ்வும், நிலையான வளமும் பெற்றிட வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட தலைவர்  எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார். அவர் வன்னிய சமுதாயத்தின் உயர்வுக்காக அயராது உழைத்தவர். அரசியல் வாழ்வில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி சரித்திரம் படைத்தவர். நாடு சுதந்திரம் பெற்ற பின் 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஜனநாயகத் தேர்தலில் 21 பேரை வேட்பாளராக நிறுத்தி 18 பேரை வெற்றி பெறச் செய்து அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் நிலையான அரசு அமையக் காரணமாக இருந்தவரும் ராமசாமி படையாட்சியார் தான். வெள்ளையர் காலத்தில் வன்னிய சமூகத்தை குற்றப் பரம்பரை என்ற பட்டியலில் வைத்திருந்த நிலையை நீக்கிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து அதை நிறைவேற்றினால் நீங்கள் முதலமைச்சர் ஆவதற்கு எனது ஆதரவு என்று சொல்லி ராஜாஜிக்கு ஆதரவு அளித்தார். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதும் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராமசாமி படையாட்சியார் ஆதரவு கொடுத்ததால்தான் தமிழ்நாட்டில் அன்றைக்கு நிலையான ஆட்சி அமைந்தது என்பது வரலாறு. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து