மனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      விளையாட்டு
Kolli 2019 07 19

Source: provided

இந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா? வேண்டாமா? என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி எடுத்துக் கொள்ளலாம் என சி.ஓ.ஏ தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் போட்டியில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டன. ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்த போது பி.சி.சி.ஐ.-யில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கோர்ட் வலியுறுத்தியது. மேலும், லோதா என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்து பி.சி.சி.ஐ-யில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதை அறிக்கையாக தயாரித்து தாக்கல் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டது.

லோதா கமிட்டி கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட கிரிக்கெட் தொடர்பானவர்களுடன் ஆலோசனைகள் பெற்று மிகப் பெரிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. லோதா கமிட்டி தாக்கதல் செய்த அறிக்கையில் 90 சதவீத பரிந்துரைகளை அப்படியே நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பி.சி.சி.ஐ.-யில் இருந்தவர்கள் அதை நடைமுறைப் படுத்தவில்லை. இதனால் வினோத் ராய் தலைமையில் நிர்வாக்குழு ஒன்றை அமைத்தது.இந்தகுழுவில் தற்போது வினோத் ராய், டயானா எடுல்ஜி ஆகியோர் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு இடையே சில விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உச்சநீதிமன்றம் குறைதீர்க்கும் அதிகாரியாக டி.கே. ஜெயின் என்பவரை நியமித்தது.வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழுவால் லோதா பரிந்துரையை அமல்படுத்த முடியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக இந்த குழுதான் பி.சி.சி.ஐ-யை நடத்தி வருகிறது.

இந்நிலையில் திடீரென வினோத் ராய் இந்திய அணியின் சுற்றுப் பயணத்தின் போது வீரர்கள் தங்களது மனைவி, காதலிகளை அழைத்துச் செல்வது, எத்தனை நாட்கள் வீரர்களுடன் அவர்கள் தங்கிக் கொள்ளலாம் என்பது குறித்து கேப்டனான விராட் கோலி, பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆகியோர் முடிவு செய்து கொள்ளலாம். இது குறித்து பி.சி.சி.ஐ அதிகாரிகள் யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை என்று கூறியிருந்தார்.

இது லேதாவுக்கும், பிசிசிஐ அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து லோதா கூறுகையில் ‘‘இதுகுறித்து நான் என்ன சொல்ல முடியும்? குறைதீர்க்கும் அதிகாரி உள்ளார். அவர்தான் தற்போது முடிவு எடுக்க வேண்டும். லோதா பரிந்துரையில் ஒவ்வொருவரும் அவர்களுக்கு தேவையான வழியில் குறுக்கிடுகிறார்கள். எங்களுடைய பரிந்துரைகள் அனைத்தும் அரசியலமைப்பின்படி உருவாக்கப்பட்டது. தற்போது பிரச்சனை எழும்போது குறைதீர்க்கும் அதிகாரி முடிவு எடுக்க வேண்டும். கடந்த இரண்டு வருடமாக லோதா பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான வேலை ஏதும் நடைபெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டால் அனுமதி அளிக்கப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்ற அறிக்கையை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால், இரண்டு வருடங்கள் சென்ற பிறகும், அதற்கான வேலை நடந்ததாக எங்களால் பார்க்க முடியவில்லை’’ என்றார்.

பிசிசிஐ அதிகாரிகள் சிலர் ‘‘வீரர் மற்றும் பயிற்சியாளர்கள் முடிவு செய்தால் அது இரட்டை ஆதாயம் தரும் விவகாரமாகும். இதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்று ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து