முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக கையாளவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. மற்ற முன்னணி அணிகள் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடிய நிலையில், இந்தியா மட்டும்தான் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது.

கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இவர்கள் திகழ்ந்தனர். இதனால் இந்த ஜோடி இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.

குல்தீப் யாதவ் 10 போட்டிகளில் 7-ல் மட்டுமே இடம் பிடித்து 6 விக்கெட் வீழ்த்தினார். சாஹல் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இருவர்களையும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அணி நிர்வாகம் சிறப்பாக பயன்படுத்தவில்லை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில், உலகக்கோப்பையில் வார்னே, முத்தையா முரளீதரன், அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் இல்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தரனமான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடிய ஒரே அணி இந்தியாதான். அவர்கள் நமக்கு வெற்றியை தேடி தந்திருக்க வேண்டும். அவர்கள் இருவரையும் கையாண்ட விதம் எனக்கு சற்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.

பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் மேஜிக் பந்து வீசினார். எந்தவொரு ஆடுகளமாக இருந்தாலும் அவரால் பந்தை டர்ன் செய்ய முடியும். குறிப்பாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்த்து சிறப்பாக விளையாடியது கிடையாது. இதனால் அவர் ஏன் அரையிறுதியில் விளையாடவில்லை என்பது எனக்கு ஆச்சர்யாகமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து