எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக இங்கிலாந்து - எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      உலகம்
oil ship iran 2019 07 20

துபாய்  : இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.
அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை பறிமுதல் செய்தது. சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஆனால் இதை இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் நிர்வாகம் மறுத்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களுக்குட்பட்டு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

ஸ்டெனா இம்பீரியோ எனப்படும் இங்கிலாந்து எண்ணெய் கப்பல் சவுதிஅரேபியா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த போது சிறை பிடிக்கப்பட்டது. அதில் 23 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியா, ரஷ்யா, வாத்வியா, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள். கப்பல் சிறை பிடிக்கப்பட்ட போது நடந்த தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து