முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு நவம்பர் மாதம் ஹெலிகாப்டர் சேவை துவக்கம்

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் தொடங்குகிறது. காலடியில் இருந்து நிலக்கல் வரை ஹெலிகாப்டரில் செல்ல முடியும்.

சபரிமலைக்கு விமானத்தில் பயணம் செய்பவர்கள் கொச்சி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பம்பை செல்ல வேண்டும். இந்த ஆண்டு முதல் ஹெலிகாப்டர் சேவை தொடங்க இருக்கிறது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களான நவம்பர் 17-ம் தேதி தொடங்கி ஜனவரி 16 வரை ஹெலிகாப்டர் சேவை இருக்கும்.  இந்த ஹெலிகாப்டரில் 4 பேர் பயணிக்கலாம். காலடியில் இருந்து நிலக்கல் வரை ஹெலிகாப்டரில் செல்ல முடியும். இதற்காக காலடியிலும், நிலக்கல்லிலும் ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விமானப் பயணிகள் கொச்சி விமான நிலையம் அமைந்துள்ள நெடும்பஞ்சேரியில் இருந்து காலடி வரை காரில் அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் செல்லலாம். காலை 7 மணிக்கு காலடியில் இருந்து முதல் ஹெலிகாப்டர் புறப்படும். 35 நிமிடத்தில் நிலக்கல் சென்றடையும். தினமும் இரு மார்க்கத்திலும் 6 முறை இயக்கப்படும். ஹெலிகாப்டரில் பயணம் செய்பவர்களுக்கு அரை டிக்கெட் மற்றும் சலுகை கட்டணம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து