முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசியின் அடுத்த அதிரடி. அமலுக்கு வரும் புதிய விதி.. தப்பித்த கேப்டன்கள் சிக்கிக் கொண்ட வீரர்கள்

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

தற்போது மீண்டும் புதிய விதி ஒன்றை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதி மூலம் அணியின் கேப்டன்கள் தப்பித்து விட்டார்கள் வீரர்கள் சிக்கிக் கொண்டார்கள்.

காயம் காரணமாக வீரர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று வீரரும் பேட்டிங், பவுலிங் செய்ய ஐசிசி அனுமதி வழங்கி இருந்தது. இந்த புதிய விதியால் காயம் காரணமாக போட்டியிலிருந்து வீரர்கள் விலகினாலும் அந்த அணிக்கு எந்தவித சிக்கலும் இருக்காது. இதைத் தொடர்ந்து அடுத்த புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.

ஒரு போட்டியில், ஒரு அணி தாமதமாக பந்து வீசினால் அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளிலும் இவ்வாறு நிகழ்ந்தால், அந்த அணியின் கேப்டன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். தற்போது ஐசிசி இந்த விதியை மாற்றியுள்ளது.

தாமதாக பந்துவீசும் அணியின் அனைத்து வீரர்களுக்கும் இனி ஒரே மாதிரியான தண்டனை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி இனி அபராதமானது கேப்டனுக்கு மட்டுமின்றி அணியின் அனைத்து வீரர்களுக்கும் சேர்த்தே விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து