முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ 10 ஆயிரமாக அதிகரிப்பு - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது குறித்து சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கிய பதிலுரை வருமாறு:-

ஒரு அரசுக்கு அச்சாணியாக திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள் ஆவார்கள். அவர்கள் நலனில் அக்கறை கொண்டது அம்மா அவர்களது அரசு. அந்த அடிப்படையில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ. 5000-லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு அரசின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மைக்கு ஒரு முழுமையான தீர்வு வழங்கும் திட்டமாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் விளங்குகிறது. இத்திட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை ஐந்தாண்டு கால அளவில் 288.91 கோடி ரூபாய் செலவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 23,648 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். இத்திட்டத்தில் வருவாய் வசூல் கணக்குகளை நிகழ் நேரத்தில் மின்னணு வருவாயாக பெறுவதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி உடனடியாக சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு எளிமையான முறையில் பராமரிக்கப்படுவதோடு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மேலாண்மை போன்ற விவரங்கள் நிகழ்நேர அடிப்படையில் உடனுக்குடன் பதியப்படும். இம்மென்பொருள், தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் மென்பொருள்களுடன் இணையோட்டமாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. விரைவில், இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் . தற்போதுள்ள நடைமுறைகளுக்கு உட்பட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம், 2,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து