வேலூர் தொகுதி தேர்தலில் தொகுதிவாரியாக அ.தி.மு.க. பணிக்குழு: நாளை முதல் பணியை தொடங்குங்கள் - கட்சியினருக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் உத்தரவு

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      தமிழகம்
EPS-OPS 2019 05 20

சென்னை : வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 209 பேரும் நாளை முதல் தொகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்டளையிட்டுள்ளனர்

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் 5.8.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை   ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியாக பின்வருமாறு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல. சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் தொகுதிக்கு கிருஷ்ணகிரி மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் அ.தி.மு.க.வினர் பணியாற்றுவர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை. அமைச்சர்கள் தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்ட அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் பணியாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ்வைத்தியணான்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு அமைச்சர் எஸ்.பி. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொ்குதியில், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகியோர் பணியாற்றுவர். இத்தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ராஜலெட்சுமி மாபா. பாண்டியராஜன். ராஜ்யசபா எம்.பி.க்கள். முத்துக்கருப்பன் விஜிலா சத்தியானந்த், எம்.பி.முருகையாபாண்டியன், எம்.எல்.ஏ. சுதா கே. பரமசிவன், சின்னத்துரை அமைப்புச் செயலாளர் ( இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்) ஐஎஸ் . இன்பதுரை, ( தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்) சி.த. செல்லப்பாண்டியன்( கழக அமைப்புச் செயலாளர்) தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன் தச்சை கணேசராஜா எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன், சின்னப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அமைச்சர் சி.வி. :. சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார், இந்த தொகுதிக்கான தேர்தல் பணியில் : காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன, இந்த தேர்தல் பணியில் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட 25 பேர் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது., வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக உயர்கல்வி அமைச்சர் : அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார், இந்த தேர்தல் பணியில் : வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் ஈடுபடும் என்றும் தேர்தல் பணிக்குழுவில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அமைச்சர் ஜெயகுமார் முன்னாள் எம்.பி.பி.எச் . மனோஜ் பாண்டியன், உள்ளிட்ட 49 பேர் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அதிமுகவின் ``இரட்டை இலை’’ சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக்குச் சென்று, 22.ம்தேதி -காலை 10 மணி முதல் தேர்தல் பணிகளை, அங்கேயே தங்கியிருந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து