இந்திய நகைச்சுவை பேச்சாளர் பார்வையாளர்கள் முன் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      உலகம்
comedy speaker death 2019 07 21

துபாய் : இந்திய வம்சாவளியை சேர்ந்த மேடை நகைச்சுவை பேச்சாளர் நிகழ்ச்சியின் இடையே பார்வையாளர்கள் முன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் நாயுடு. 36 வயதான இவர் அபுதாபி நகரில் பிறந்து பின்னர் துபாயில் வளர்ந்துள்ளார். இவரது பெற்றோர் மரணம் அடைந்து விட்டனர். ஒரே ஒரு சகோதரர் இவருக்கு உள்ளார். இவரது குடும்பத்தினர் அனைவரும் கலை மற்றும் நகைச்சுவை சார்ந்த துறையில் உள்ளனர். ஆனால் மஞ்சுநாத்தின் உறவினர்கள் யாரும் துபாயில் இல்லை.

இந்த நிலையில், வழக்கம் போல் துபாயில் மேடை நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்த தொடங்கினார். தனது தந்தை மற்றும் குடும்பம் பற்றி கூடியிருந்த மக்களின் முன் கூறினார். தனது கதைகளை கூறி அவர்களை சிரிக்க வைத்தபடி இருந்துள்ளார். இதன்பின் அதிக பதற்றத்தினால் எப்படி பாதிக்கப்பட்டேன் என அவர் கூற தொடங்கினார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அருகே இருந்த பெஞ்சில் அமர்ந்து பின் அதில் இருந்து சரிந்து கீழே விழுந்து உயிரிழந்து உள்ளார். ஆனால் இதனை கண்டு கொண்டிருந்தவர்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்து நகைச்சுவையாகவே எடுத்துள்ளனர். இதன்பின் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க ஓடோடி வந்தனர். எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்த நிலையிலேயே அதிக அளவில் பதற்றத்துடன் இருக்க முற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து உள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து