முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

 ஸ்ரீநகர் : கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.   

காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற ஆபரேஷன் விஜய்  என்ற பெயரில் இந்திய படைகள் போரிட்டன. 2 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போர் வெற்றியின் 20-வது ஆண்டு அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம்  ஒரு நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். அங்குள்ள கார்கில் பகுதிக்கு சென்ற அவர், அங்கு கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் திராஸ் பகுதியில் போர் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள வீர் பூமியையும் அவர் பார்வையிட்டார். அங்கு முக்கியமான சண்டைகள் தொடர்பான தகவல்களுடன் அமைக்கப்பட்டு இருக்கும் நினைவு பாதை ஒன்றையும் அவர் திறந்து வைத்தார். அங்கு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் தேநீர் அருந்திய ராஜ்நாத் சிங், அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த பணிகளை பாராட்டினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து